< Back
மாநில செய்திகள்
பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
11 Jun 2023 1:15 AM IST

பொள்ளாச்சி பகுதியில் பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) 6 முதல் 12-ம் வகுப்பு வரையும், 14-ந்தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை, சுல்தான்பேட்டை, நெகமம், வால்பாறை பகுதிகளில் 424 தொடக்கப்பள்ளிகளும், 105 நடுநிலைப்பள்ளிகளும், 37 உயர்நிலைப்பள்ளிகளும், 40 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

நகராட்சி பள்ளிகளில் நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வகுப்பறைகள், கழிப்பிடங்கள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதற்கிடையில் பள்ளிகளில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், முறையாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகள், வளாகங்களை சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பிடங்கள், குடிநீர் தொட்டிகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

பாடப்புத்தகங்கள்

இதற்கிடையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு முடியும் வரை அந்த மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான கலை திருவிழா போன்ற போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.

பள்ளிகள் திறக்கும் முதல் நாள் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்