திருவள்ளூர்
ஊத்துக்கோட்டையில் கஞ்சா கடத்தலை தடுக்க வாகன சோதனை தீவிரம்
|ஊத்துக்கோட்டையில் கஞ்சா கடத்தலை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை தமிழக எல்லையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி மற்றும் சத்தியவேடு பகுதிகளில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கு கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சுபாஷ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சிவா, முருகேசன் பரமசிவம், ஏட்டுகள் சுந்தரம் ராஜன், முருகேசன் ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை, அண்ணா நகர், சக்திவேடு சாலைகளில் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி எச்சரித்துள்ளார்.