< Back
மாநில செய்திகள்
தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
22 Sept 2023 1:16 AM IST

விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தாயில்பட்டி,

விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கண்காட்சி அரங்கம்

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வு நடைபெறும் இடத்தில் முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள், கல்லூரி, பள்ளி, மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். அகழாய்வு மற்றும் கண்காட்சி நடைபெறும் இடம் வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீ.தொலைவு வரை சாலை வசதி முழுமையாக இல்லாததால் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு வந்தனர். ஆதலால் இங்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சாலை அமைக்கும் பணி

பொதுமக்களின் ேகாரிக்கையை ஏற்று தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அகழாய்வு பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெற இருப்பதால் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலாண்டு விடுமுறைக்கு முன்னதாகவே தார்ச்சாலை அமைக்கும் பணி முடிவடைவதால் காலாண்டு விடுமுறையில் கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் வருகை தருவார்கள் எனவும், அவர்கள் வந்து செல்ல புதிய தார்ச்சலை எளிதாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்