< Back
மாநில செய்திகள்
கோவில் நிலங்களை அளக்கும் பணி தீவிரம்
அரியலூர்
மாநில செய்திகள்

கோவில் நிலங்களை அளக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
15 March 2023 11:22 PM IST

கோவில் நிலங்களை அளக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்வதற்கான நில அளவை குழுக்கள் அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 1,484 ஏக்கர் கோவில் நிலங்கள் அளக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரியலூர் மாவட்டம் காரப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் நிலங்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தாசில்தார் கலைவாணன், இந்து சமய அறநிலையத்துறை திருமானூர் ஒன்றிய ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் மேற்பார்வையில் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்