< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரம்
|9 Oct 2023 12:15 AM IST
வாய்மேடு அருகே 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தீவிரம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்ச நதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் ஆற்றங்கரை மற்றும் வாய்க்கால் கரையோர பகுதிகளில் ஊராட்சியின் சார்பாக ஒரு லட்சம் பனை விதைகள் விதைப்பது என தீர்மானிக்கப்பட்டு நேற்று வரை 28 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி முடிவடைந்துள்ளது. நேற்று நடந்த பனைவிதைகள் விதைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம்முருகையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பனை விதைகள் விதைக்கும் பணி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. முடிவில் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.