< Back
மாநில செய்திகள்
2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
15 Jun 2023 8:16 PM GMT

முட்டத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

ராஜாக்கமங்கலம்,

குமரி மேற்கு கடற்கரையில் கடந்த 1-ந்தேதி முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகள் கடந்த 15 நாட்களாக மீன் பிடிக்கச் செல்லவில்லை. வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. நேற்று முன்தினம் காலையில் அழிக்கால் மீனவர்கள் வள்ளத்தில் மீன் பிடிக்கச் சென்றனர். கரையில் இருந்து ஒன்றரை நாட்டிக்கல் கடல் மைல் தூரம் சென்றபோது ஆளில்லாத ஒரு வள்ளம் மிதந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட மீனவர்கள் அந்த வள்ளத்தை மீட்டு முட்டம் மீன் பிடித்துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதில் அந்த வள்ளம் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த மரியதாசன் (வயது 57) என்பவருக்கு சொந்தமானது என்றும், மீன்பிடிக்கச் சென்ற அவர் கரைக்கு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. அவர் வள்ளத்தில் இருந்து தவறி கடலில் விழுந்து மாயமாகி இருக்கலாம் என போலீசார் அவரை தேடும்பணியில் ஈடுபட்டனர். உறவினர்களும் வள்ளம், விசைப்படகுகளில் அவரை தேடினர். ஆனால், நாள் முழுவதும் ேதடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக ேபாலீசார், உறவினர்கள் 25 வள்ளங்களில் சென்று தேடினர். இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீனவர் மரியதாசனின் குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்