< Back
மாநில செய்திகள்
சாலை சீரமைப்பு பணி தீவிரம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சாலை சீரமைப்பு பணி தீவிரம்

தினத்தந்தி
|
25 July 2023 1:00 AM IST

இடையக்கோட்டை அருகே தினத்தந்தி செய்தியால் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து சின்னக்காம்பட்டி, மாம்பாறை, அய்யம்பாளையம் வழியாக மார்க்கம்பட்டி வரை உள்ள சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகலப்படுத்தும் பணி நடந்தது. அதன் பின்னர் சின்னக்காம்பட்டி அருகே சாலையின் நடுவே 2 இடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். சின்னக்காம்பட்டி பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்