< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
|22 Sept 2022 12:32 AM IST
கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தெருக்கள் மற்றும் தொட்டிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். மேலும் சேகரித்து வைக்கப்படுகிற தண்ணீரில் அபேட் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில் உள்ள 15 வார்டுகளில் வீதி, வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. இந்தப் பணியை பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் மற்றும் செயல் அலுவலர் மாலதி தலைமையில் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நேதாஜி மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.