< Back
மாநில செய்திகள்
ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
22 July 2023 12:15 AM IST

மார்த்தாண்டம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

குழித்துறை,

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. தற்ேபாது குழித்துறை ரெயில் நிலையம், தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியில் சுமார் 30 அடி உயரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த மேம்பாலம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சென்று குழித்துறை ரெயில் நிலையத்தை அடைகிறது. இந்த மேம்பாலம் கட்டுமான பணி இன்னும் சில மாதங்களில் முடிவுறும் வகையில் வேகமாக நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்