< Back
மாநில செய்திகள்
வாகனங்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

வாகனங்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
17 Sept 2022 10:32 PM IST

வாகனங்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி மற்றும் நகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவுப்படி நகராட்சி சுகாதார துறை சார்பில் நகர் முழுவதும் கொசு புகை அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகராட்சி பணியாளர்கள் வாகனங்கள் மூலமும், நடந்தும் புகை அடித்து செல்கின்றனர். நகரில் அனைத்து வீதிகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வீதியாக கொசுப்புகை அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்