< Back
மாநில செய்திகள்
அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் மண் நிரப்பும் பணி தீவிரம்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் மண் நிரப்பும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:11 AM IST

அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் மண் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரியலூர் தற்காலிக பஸ் நிலையம் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என `தினத்தந்தி' நாளிதழில் கட்டுரை வடிவிலான செய்தி வெளியிடப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் சேறும் சகதியுமாக கிடந்த இடங்களை சரளை மண்ணைக்கொண்டு நிரப்பும் பணி நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள பள்ளங்களிலும் மண்ணைக்கொண்டு நிரப்பும் பணி நடைபெற்றது. பொதுமக்களுக்கு அவதியளித்த இந்த பிரச்சினை குறித்து செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' நாளிதழுக்கும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்