< Back
மாநில செய்திகள்
கொசு ஒழிப்பு பணி தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

தினத்தந்தி
|
11 Sep 2023 7:29 PM GMT

சிவகாசி மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என சுகாதாரபிரிவு அதிகாரி தெரிவித்தார்.

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என சுகாதாரபிரிவு அதிகாரி தெரிவித்தார்.

சுழற்சி முறை

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் சிவகாசி, திருத்தங்கல் மண்டலங்களில் தினமும் 2 வார்டில் எந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மூலம் கொசு புழு உருவாகாமல் இருக்க 66 பணியாளர்கள் ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

சிவகாசி பகுதியில் 4 வார்டுகளிலும், திருத்தங்கல் பகுதியில் 4 வார்டுகளிலும் இந்த பணிகள் நடைபெறுகிறது. இதனை கமிஷனர் சங்கரன் மற்றும் சுகாதார பிரிவு அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து வருகிறார்கள். கொசு மருந்து தெளிப்பு பணியும், தண்ணீர் ஆய்வு பணியும் வாரத்திற்கு ஒரு முறை சுழற்சிமுறையில் நடந்து வருகிறது.

கொசு ஒழிப்பு

இதனால் கொசுபுழுக்கள் உற்பத்தியாகாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரபிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு பாதிப்பு இல்லை. குடிநீரை நீண்டநாட்கள் தேக்கி வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

கொசு புழுக்கள் உருவாகும் நிலை உள்ள இடங்களில் அதனை அழிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் சேமித்து வைத்து தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்