< Back
மாநில செய்திகள்
நீலகிரி வீரர்களுக்கு தீவிர பயிற்சி
நீலகிரி
மாநில செய்திகள்

நீலகிரி வீரர்களுக்கு தீவிர பயிற்சி

தினத்தந்தி
|
6 Oct 2023 1:00 AM IST

மாநில கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நீலகிரி வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் சார்பில் சென்னை, சேலம், கோவை, நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, ஈரோடு, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் 20 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான கால்பந்து போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில் கூடலூர், ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறந்த கால்பந்து வீரர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோத்தகிரி மைதானத்தில் கடந்த 3-ந் தேதி முதல் வருகிற 11-ந் தேதி வரை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் மேற்பார்வையில், முதன்மை பயிற்சியாளர் சசி மற்றும் உதவி பயிற்சியாளர் ஹரிஷ் ஆகியோர் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட கால்பந்து வீரர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட அணி வருகிற 13-ந் தேதி காலை தனது முதல் போட்டியில் தூத்துக்குடி மற்றும் திருவாரூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்