< Back
மாநில செய்திகள்
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

தினத்தந்தி
|
7 Aug 2022 4:10 PM GMT

கீழப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள கீழப்பட்டு கிராமத்தில் வேளாண்மை துறையின் அட்மா திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், முகமதுநாசர், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா வரவேற்றார். வேளாண் பயிர்களில் உழவன் செயலி செயல்பாடு, கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித்திட்டம், அங்கக உரங்களின் பயன்பாடு, தென்னங்கன்று நடவு, மண் மாதிரி சேகரிப்பு, இயற்கை வேளாண்மையின் பயன்பாடு, மண் வள மேலாண்மை ஆகியவை குறித்து விரிவாக எடுத்து கூறி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தொழில்நுட்ப மேலாளர் மேரிஆனந்தி, பயிர் மதிப்பீட்டு ஆய்வு பணியாளர்கள் வல்லரசு, ஏழுமலை, மாதேஸ்வரன், ராகவன், மாரிமுத்து மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்