புதுக்கோட்டை
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தல்
|வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர் தகவல்களை ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கியது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையத்திலும் அல்லது வாக்காளர் உதவி மையம் voter Help Line-VHP என்ற செயலி மூலமாகவும், அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6-டி யில் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், இ-சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்ப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.