பெரம்பலூர்
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
|அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா உள்ளிட்ட இதர 15 நல வாரியங்கள் மற்றும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களையும் https:/tnuwwb.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்து அனுப்பிவைக்கலாம். தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்று மாதாந்திர ஓய்வூதியம் பெற்றுவரும் தொழிலாளர்கள் அனைவரும் 2023-24-ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதலை வருகிற 30-ந் தேதிக்குள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் இணைய தளம் https:/tnuwwb.tn.gov.in/ வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது ஆயுள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய ஆதார்அட்டை, குடும்ப அட்டை, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம்-1, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் நடப்பு மாதம் வரை வரவு-செலவு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கணினி மையம், இ-சேவை மையம், சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.