< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
ஜல்ஜீவன் திட்டத்தில் பொருத்தப்பட்ட குடிநீர் அளவீடு மீட்டரை திருடிய 5 பேர் கைது
|4 Dec 2022 12:15 AM IST
ஜல்ஜீவன் திட்டத்தில் பொருத்தப்பட்ட குடிநீர் அளவீடு மீட்டர்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் போடி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் அளவீடு மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போடி குலாளர்பாளையம் பகுதியில் உள்ள போஜராஜ் தெருவில் சுமார் 27 குடிநீர் அளவீடு மீட்டர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பித்தளையால் ஆன பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து மணிகண்டன் போடி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அதை திருடியது, போடி தேவர் காலனியை சேர்ந்த தேசிகன் (21), வேல்முருகன் (43) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.