< Back
மாநில செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் 5 பேருக்கு கூடுதல் பொறுப்பு
மதுரை
மாநில செய்திகள்

இன்ஸ்பெக்டர்கள் 5 பேருக்கு கூடுதல் பொறுப்பு

தினத்தந்தி
|
19 Nov 2022 1:53 AM IST

இன்ஸ்பெக்டர்கள் 5 பேருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் மதுரையில் சட்டம், ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் சங்கர் (திலகர்திடல் போலீஸ் நிலையம்), பொத்துராஜ் (கீரைத்துறை), கணேசன் (சுப்பிரமணியபுரம்), சேதுமணி மாதவன் (மதிச்சியம்), செந்தில் இளந்தரையன் (குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு) ஆகிய 5 பேர் உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வருகிற 23-ந் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. எனவே அவர்கள் பணி இடத்தை கூடுதல் பொறுப்பாக இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி (மதிச்சியம்), சங்கீதா (சுப்பிரமணியபுரம்), வசந்தா (குற்ற ஆவண பாதுகாப்பு பிரிவு), மணிகண்டன் (மதிச்சியம்), சுஜிதா (திலகர்திடல்) ஆகியோர் கவனித்து கொள்வார்கள் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்