< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு
|10 Feb 2024 11:30 PM IST
வருகிற 12-ந்தேதி சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
சென்னை,
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார்.
வருகிற 12-ந்தேதி சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, சட்டப்பேரவையில் உள்ள கணினி, ஒலிப்பெருக்கி மற்றும் இருக்கைகள் சரியாக உள்ளனவா என்பதை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று (10.02.2024) தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, சட்டமன்றப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.