< Back
மாநில செய்திகள்
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கடைகளில் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கடைகளில் ஆய்வு

தினத்தந்தி
|
4 Nov 2022 12:23 AM IST

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனரா? என்று மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் மூர்த்தி, தொழிலாளர் நல ஆய்வாளர் சாந்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மாவட்ட குழந்தை நல அலுவலர் கோபிநாத், சைல்டு லைன் திவ்யா, சமூக நலத்துறை உறுப்பினர் ரேகா ஆகியோர் இணைந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில் வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி, தேவையூர், சின்னாறு ஆகிய கிராமங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்