< Back
மாநில செய்திகள்
சேலம் புதுரோட்டில் சாலை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
சேலம்
மாநில செய்திகள்

சேலம் புதுரோட்டில் சாலை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
28 Sept 2022 2:08 AM IST

சேலம் புதுரோட்டில் சாலை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

சூரமங்கலம்:-

சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட இரும்பாலை மெயின் ரோடு புதுரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு திட்டத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை சென்னை சாலை பாதுகாப்பு அலகின் கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் மற்றும் சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கண்காணிப்பு பொறியாளர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது சேலம் சாலை பாதுகாப்பு அலகின் கோட்ட பொறியாளர் குமுதா, உதவி கோட்ட பொறியாளர் ராமநாதன், சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் செ.துரை, உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் வெங்கட்ராஜுலு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்