< Back
மாநில செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு

தினத்தந்தி
|
28 Oct 2022 12:27 AM IST

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ராமநாதபுரம் தாசில்தார் முருகேசன், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்