< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
12 Oct 2023 12:30 AM IST

வால்பாறையில் அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.



வால்பாறையில் அரசு தொடக்கப்பள்ளி, நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி (தொடக்கப்பள்ளி) வள்ளியம்மாள் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ -மாணவிகளிடம் நேரடியாக கேள்விகளை கேட்டு மாணவ- மாணவிகளின் கல்வி தரம் குறித்து சோதனை நடத்தினார். வாட்டர்பால்ஸ், உண்டு உறைவிடப் பள்ளி, தனியார் பள்ளி, உருளிக்கல் எஸ்டேட் பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி வள்ளியம்மாள் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ஆசிரியர்களிடம் மாணவ மாணவிகளுக்கு போதிக்கும் முறை குறித்து கேட்டறிந்தார். பள்ளிகளின் அடிப்படை தேவைகள் கூடுதல் வசதிகள், வகுப்பறை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார்ராஜா, வட்டார கல்வி அதிகாரிகள் வெள்ளிங்கிரி, பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்