
நாமக்கல்
வளர்ச்சி பணிகளைகண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பள்ளிபாளையம் பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம் பகுதியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி, அக்ரஹாரம், எலந்தைகுட்டை ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் தொடர்ச்சியாக பள்ளிபாளையம் நகராட்சி புதன்சந்தை அருகில் ரூ.36 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் சுகாதார வளாகத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் எலந்தகுட்டை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் ரூ.11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் ரேஷன் கடை கட்டிட பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கற்றல் திறன்
மேலும் அவர் அக்ரஹாரம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்பட் உடுள்ள சீரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் அவர் திருச்செங்கோடு அரசினர் மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கலையரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, மலர்விழி உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.