< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தினத்தந்தி
|
19 Nov 2022 12:15 AM IST

வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிற்றுண்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எசனை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை, பாப்பாங்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதே பகுதியில் வேளாண் திட்டப்பணிகள் குறித்தும் கள ஆய்வு மேற்கொண்டார். மேலும் எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் "எண்ணும், எழுத்தும் திட்டம்" குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார். பின்னர், அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்