< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தினத்தந்தி
|
18 March 2023 12:01 AM IST

வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், கலெக்டர் கற்பகம் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கல்பாடி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.7.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர் கல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் நீர்வளத்துறையின் சார்பில் மருதையாற்றின் கிளையாற்றில் ஒன்றான கல்பாடி ஓடையின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் 35 மீட்டர் நீளத்தில் புதிய தடுப்பணை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து மண்மேடுகளை அகற்றி சமதளபடுத்தவும், வேலைகளை தொய்வில்லாமல் விரைவாக முடிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அரசு அலுவலர்களுடான ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்