ராணிப்பேட்டை
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
|ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தனிச்செயலாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறைவாரியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார். அதேபோல திட்டங்களை செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திறம்பட...
அப்போது திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவும், அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதனை உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் திறம்பட செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.