< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
|29 May 2022 6:08 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக்குழு ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக்குழு ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய உள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை துணை ஆணையர், நடராஜர் கோவில் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் 2014-ம் ஆண்டு முதல் கோவில் வரவு, செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், திருப்பணி குறித்த விவரங்கள், கோவில் சொத்துகள் மற்றும் குத்தகை விவரங்களை அறநிலையத்துறை ஆய்வின் போது வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.