சென்னை
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு
|சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, சமூக நலத்துறையின் சார்பாக செயல்பட்டு வரும் திட்டங்கள், மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
அப்போது, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக திருமண நிதியுதவி திட்டங்கள், பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம், குடும்பவன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப் பு மற்றும் பராமரிப்பு சட்டம், பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை கேட்டு அறிந்தார்.
கூட்டத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ .விஜயா ராணி, சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவின் காவல்துறை துணை ஆணையர் சி.சியமளா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.