விழுப்புரம்
காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு; 64 நிறுவனங்களுக்கு அபராதம்
|காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 64 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேற்கண்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக என்று மொத்தம் 108 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அபராதம்
இதில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 36 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 24 முரண்பாடுகளும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் ஆக மொத்தம் 64 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்நிறுவனங்களின் மீது இணக்க கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.