< Back
மாநில செய்திகள்
சங்ககிரி அருகே  ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு
சேலம்
மாநில செய்திகள்

சங்ககிரி அருகே ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு

தினத்தந்தி
|
23 Sept 2022 2:28 AM IST

சங்ககிரி அருகே ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

சங்ககிரி,

சங்ககிரி அருகே வீராட்சிபாளையம், சின்னாகவுண்டனூர் ஊராட்சிகளில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கல் குவாரிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததா? என மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய அரசு நிதி ஆயோக் துணை ஆலோசகர் சரவணபவன் தலைமையில் அறிவியல் நிபுணர் ராதிகா எராண்டே அடங்கிய குழுவினர் கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரின் தன்மையை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சங்ககிரி ஒன்றிய ஆணையாளர் ராஜ கணேஷ், ஏற்காடு ஒன்றிய ஆணையாளர் முருகன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முதன்மை மேலாளர் ஆத்மராமன், கனிமவள பொறியாளர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வெயில்கரடு பகுதியில் உள்ள கல்லாறு ஓடையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் தாமரைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், செயலாளர் துளசிராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்