< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
|29 Sept 2023 5:00 AM IST
தேனி நகர் பெரியகுளம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி நகர் பெரியகுளம் சாலையில்பெத்தாட்சி விநாயகர் கோவிலில் இருந்து மின்வாரிய பண்டகசாலை வரை நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளை அகற்றிக்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அங்கிருந்த 13 கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்து விடாமல் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று அங்கு வேலி அமைக்கும் பணி நடந்தது. சாலையோரம் கல்தூண்கள் ஊன்றி முள்கம்பி வேலி அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.