< Back
மாநில செய்திகள்
சத்தியமங்கலத்தில் பாலம் கட்டும் பணியை மாநில தலைமை பொறியாளர் ஆய்வு
ஈரோடு
மாநில செய்திகள்

சத்தியமங்கலத்தில் பாலம் கட்டும் பணியை மாநில தலைமை பொறியாளர் ஆய்வு

தினத்தந்தி
|
11 Jun 2023 2:31 AM IST

சத்தியமங்கலத்தில் பாலம் கட்டும் பணியை மாநில தலைமை பொறியாளர் ஆய்வு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்தது. இதனால் அதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.11 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதங்களாக புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மாநில தலைமை பொறியாளர் கீதா நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பாலத்தின் வரைபடத்தையும் பார்வையிட்டார். மேலும் கட்டுமான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பண்ணாரி செல்லும் பாதையில் வடவள்ளி முதல் சீவக்காய்பள்ளம் வரை நடைபெறும் சாலை பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, தேசிய நெடுஞ்சாலை கோபி கோட்ட பொறியாளர் டி.செல்வம், சேலம் தேசிய நெடுஞ்சாலை துறை தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் குப்புசாமி, மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்