< Back
மாநில செய்திகள்
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில்தர்மபுரி மாவட்ட சூப்பிரண்டு திடீர் ஆய்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில்தர்மபுரி மாவட்ட சூப்பிரண்டு திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
5 May 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள வழக்குகள், அதுகுறித்த தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக போலீசாரிடம் கேட்டறிந்து வழக்கு விவர ஆவணங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கைதிகள் அறை, வழக்கு ஆவணங்கள் பாதுகாப்பு, பராமரிப்பு அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட நிலைய போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்