< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
ஏற்காட்டில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு
|8 March 2023 3:23 AM IST
ஏற்காட்டில் கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
ஏற்காடு
ஏற்காட்டில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று திடீரென ஆய்வு செய்தார். ஏற்காடு ரவுண்டானா பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடத்தை அவர் பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்து, அப்புறப்படுத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாரமங்கலம் ஊராட்சி பகுதியில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் 7-வது பீல்டு வழியாக சாலை வேண்டாம். 6-வது பீல்டு வழியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து 6-வது பீல்டு பகுதியில் சாலை அமைக்க போதுமான வசதி உள்ளதா? என கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் பாலசந்தர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.