கிருஷ்ணகிரி
கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
|கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது, அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் கருவி பொருத்தும் இடங்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை அரங்கம், மத்திய கிருமி நாசினி உபகரணங்கள், மருந்துகள் இருப்பு வைக்கும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, நவீன சலவையகம், மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தும் பையோ மெடிக்கல் பிரிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிகிச்சை பிரிவு தனி வார்டுகள், பொது வார்டுகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அறிவுறுத்தல்
அப்போது கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யவும், பொதுப்பணித்துறை சார்பாக கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகள் விரைந்துமுடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ, துணை முதல்வர் சாத்விகா, மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், மருத்துவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.