< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
19 Feb 2023 12:15 AM IST

காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

காரிமங்கலம்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய மாநில சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநில கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரியாம்பட்டி முதல் நிலை ஊராட்சியில் சமத்துவ சீரமைப்பு பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மத்திய மாநில திட்ட பணிகளை சீரான முறையில் செயல்படுத்தவும், உரிய காலத்தில் பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, கிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் முருகன், ஸ்ரீதர், ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி சங்கர், செயலாளர் முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்