கிருஷ்ணகிரி
ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு
|ஓசூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஓசூர்
ஓசூரில் நடமாடும் உணவகங்கள் மற்றும் சில ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தரமில்லாத கெட்டுப்போன வறுத்த சிக்கன், எண்ணையில் வறுத்த மீன்கள், வறுத்த இறைச்சி மற்றும் வடை, சமோசா ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் கெட்டுப்போன 6 கிலோ சிக்கன், 3 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். அத்துடன், உணவுப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். தரமற்ற சுகாதாரமின்றி இயங்கி வந்த உரிமையாளர்கள் 9 பேருக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.