< Back
மாநில செய்திகள்
குடிநீர் பிரச்சினை குறித்து மேயர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

குடிநீர் பிரச்சினை குறித்து மேயர் நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
26 Jan 2023 12:15 AM IST

ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினை குறித்து மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

ஓசூர்

ஓசூர் மாநகராட்சி 7 மற்றும் 11-வது வார்டுகளுக்குட்பட்ட புதிய வசந்த் நகர், ராஜிவ் நகர், ராஜேஸ்வரி நகர், பழைய வசந்த் நகர், ஜெ.ஜெ.நகர், ரெயின்போ கார்டன் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது கழிவுநீர் கால்வாய், குடிநீர் பிரச்சினைகள் குறித்து அவர் வீடுகள் தோறும் சென்று பார்வையிட்டார். பின்னர், அந்தபகுதி மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மண்டல தலைவர் ரவி, மாநகராட்சி கவுன்சிலர் மாரக்கா சென்னீர் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்