< Back
மாநில செய்திகள்
பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில்வருமான வரி துறையினர் சோதனை நிறைவு
நாமக்கல்
மாநில செய்திகள்

பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில்வருமான வரி துறையினர் சோதனை நிறைவு

தினத்தந்தி
|
8 Jan 2023 12:15 AM IST

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையத்தை சேர்ந்த பா.ம.க. செயலாளரான இ.கே.பெரியசாமி திம்மநாயக்கன்பட்டி பகுதியில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் பவுடர் பெங்களூருவில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரி துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர். அதன்படி நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து மாலை 4.30 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் அதிகாரிகள் வரவு செலவு அடங்கிய டைரியை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்