< Back
மாநில செய்திகள்
சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

ராயக்கோட்டையில் சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

ராயக்கோட்டை

ராயக்கோட்டையில் இருந்து அத்திப்பள்ளி செல்லும் இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கிருஷ்ணகரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது சாலையின் நீளம், அகலம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை தரமாகவும், விரைவாக முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளா திருமால்செல்வன், உதவி பொறியாளா மன்னார் மன்னன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்