< Back
மாநில செய்திகள்
விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் பார்வையாளர் ஆய்வு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் பார்வையாளர் ஆய்வு

தினத்தந்தி
|
19 Dec 2022 12:15 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,880 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது. இந்த சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதை சாரி பார்க்கும் பணியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைவினை மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா, வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட மேலுமலை, சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட சோமநாதபுரம், கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.

அறிவுறுத்தல்

இது குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனப்பள்ளி, தளி, பர்கூர், ஊத்தங்கரை 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,880 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த சிறப்பு முகாமில் 75,824 விண்ணப்பங்கள் வர பெற்றன. இந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக விசாரணை நடத்தி தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, உதவி கலெக்டர்கள் சரண்யா, சதீஷ்குமார், தாசில்தார்கள் அனிதா, சம்பத் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்