< Back
மாநில செய்திகள்
நாமக்கல்  உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில்   கலெக்டர் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
17 Nov 2022 12:03 AM IST

நாமக்கல்லில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்று கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாமக்கல் ஆவண காப்பகத்தில் நில அளவை ஆவணங்களான சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில், உயிரியல் உரங்கள் தயாரிக்கபட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வகத்தில் உயிரியல் முறையில் ஓட்டுண்ணிகள், எதிர் உயிரி பாக்டீரியா, பூஞ்சாணங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுவது குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

விவசாயிகளுக்கு வினியோகம்

அப்போது இங்கு தயாரிக்கப்படும் உயிரியல் காரணிகள், ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவை நாமக்கல் மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கோவை, திருவண்ணாமலை. திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 35 முதல் 45 டன் வரை உயிரியல் காரணிகள் உற்பத்தி செய்து, அரசு வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின் போது தாசில்தார் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்