தர்மபுரி
கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு
|பாலக்கோடு பகுதியில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு, கொலசனஅள்ளி, ஜக்கசமுத்திரம், மாரண்டஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில், குளிர்பானம் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது காலாவதியான குளிர் பானங்கள், உரிய விபரங்கள் இல்லாத குளிர் பானங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் உரிய விவரங்கள் இல்லாத குடிநீர் கேன்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதித்தனர்.
தொடர்ந்்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அங்கிருந்த குடிநீர் தரம் கண்டறிய மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினர். ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர்கள் தெரிவித்தனர்.