தர்மபுரி
மாதிரி பள்ளி வகுப்பறைகள்-விடுதியில் கலெக்டர் ஆய்வு
|தர்மபுரியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதியில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார்.
தர்மபுரியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதியில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்தார்.
அரசு மாதிரி பள்ளி
தர்மபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2022-2023 ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் 120 மாணவ, மாணவிகளும், 10-ம் வகுப்பில் 80 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 200 பேர் படித்து வருகின்றனர். அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், இயங்கி வந்த அரசு மாதிரி பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தர்மபுரி நகரில் பென்னாகரம் சாலையில் ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்க உள்ளது.
இந்த அரசு மாதிரி பள்ளியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசு மாதிரி பள்ளி வகுப்பறைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து வசதிகளும் முழுமையாக உள்ளதா? என்பதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், அரசு மாதிரி பள்ளிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசபாண்டியன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜகோபால், மான்விழி, ஷகில், ரேணுகோபால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா, மாவட்ட பள்ளி கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல், ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.