< Back
மாநில செய்திகள்
நடிகர் சூரியின் ஓட்டல்களில் வணிகவரித்துறை சோதனை
மதுரை
மாநில செய்திகள்

நடிகர் சூரியின் ஓட்டல்களில் வணிகவரித்துறை சோதனை

தினத்தந்தி
|
22 Sept 2022 2:46 AM IST

மதுரையில் உள்ள நடிகர் சூரியின் ஓட்டல்களில் வணிகவரித்துறையினர் சோதனையிட்டனர்.


மதுரையில் உள்ள நடிகர் சூரியின் ஓட்டல்களில் வணிகவரித்துறையினர் சோதனையிட்டனர்.

நகைச்சுவை நடிகர்

நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் ஓட்டல்கள் உள்ளன. காமராஜர் சாலை, அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி, ஊமச்சிகுளம், ரிசர்வ்லைன், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் அம்மன் உணவகம் என்ற பெயரில் இந்த ஓட்டல்கள் உள்ளன.

இந்த ஓட்டல்களில் வணிகவரி புலனாய்வுப்பிரிவு அதிகாரி செந்தில் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை

அதாவது, ஓட்டலுக்கு வாங்கும் மூலப்பொருட்களுக்கு உரிய கணக்கு காட்டாமலும், வணிக வரி செலுத்தாமலும் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஓட்டல்களில் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு முறையான பில் வழங்கவில்லை என்பதும், வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. தொகை அரசுக்கு செலுத்தவில்லை என்பதும் இந்த சோதனையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

நோட்டீசு

குறிப்பாக, காமராஜர் சாலையில் உள்ள சம்பந்தப்பட்ட ஓட்டலில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை நேற்று மாலை வரை நடந்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் வணிகவரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க ஓட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்