< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ரூ.4 கோடியில் சாலை பணியை அதிகாரி ஆய்வு
|11 Sept 2022 9:03 PM IST
கடத்திக்குட்டை-சாமிசெட்டிப்பட்டி இடையே ரூ.4 கோடியில் நடைபெறும் சாலை பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
தர்மபுரி அருகே கடத்திக்குட்டை-சாமிசெட்டிப்பட்டி வரையிலான தார்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி ரூ.4 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சாலை பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன், நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி, உதவி பொறியாளர்கள் இனியன், ரஞ்சித், ஒப்பந்ததாரர் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.