< Back
மாநில செய்திகள்
4 வழிச்சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

4 வழிச்சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
27 Aug 2022 9:43 PM IST

தர்மபுரி-மொரப்பூர் வழித்தடத்தில் 4 வழிச்சாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தர்மபுரி-மொரப்பூர் இடையே 33 கி.மீ. கொண்ட இருவழி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் அரூர்-தானிப்பாடி-திருவண்ணாமலை வழித்தடத்தில் 15 கி.மீ. இருவழி சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகளை விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான பராமரிப்பு கோட்ட பொறியாளர் ராஜதுரை, உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெய்சங்கர், கார்த்திகேயன், விஜய், கவிதா, சண்முகம், தரக்கட்டுபாட்டு உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்