< Back
மாநில செய்திகள்
ஐகோர்ட்டு நீதிபதி நிஷா பானு ஆய்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஐகோர்ட்டு நீதிபதி நிஷா பானு ஆய்வு

தினத்தந்தி
|
16 July 2022 10:21 PM IST

தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிஷாபானு நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது வக்கீல்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிஷாபானு நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது வக்கீல்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், தர்மபுரி மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான நிஷாபானு நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது வக்கீல் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று வக்கீல்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த கோர்ட்டு வளாகத்திற்கு வந்து செல்வதற்கான பஸ் போக்குவரத்து வசதியை மேலும் அதிகப்படுத்த வேண்டும். கோர்ட்டு வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வக்கீல்கள் தெரிவித்தனர்.

நிறைவேற்ற நடவடிக்கை

அப்போது ஐகோர்ட்டு நீதிபதி நிஷாபானு பேசியதாவது:-

இந்த கூட்டத்தில் வக்கீல்கள் தெரிவித்துள்ள பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண் வக்கீல்களுக்கு தனியாக அறை அமைக்கப்படும். கேன்டீனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்கு ஒரு முறை இங்கு நேரில் வருவேன். அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) முனுசாமி, விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி மணிமொழி மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல் சங்க தலைவர் பாலு, செயலாளர் தர்மன், துணைத் தலைவர் குமரேசன், மூத்த வக்கீல் அப்புனு கவுண்டர் உள்பட நூற்றுக்கணக்கான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்