< Back
மாநில செய்திகள்
வேளாண் வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வேளாண் வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு

தினத்தந்தி
|
11 July 2022 11:40 PM IST

வேளாண் வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

போகலூர்,

பரமக்குடி தாலுகா போகலூர் வட்டாரத்தில் உள்ள அ. புத்தூர், மென்னந்தி, நாகாச்சி ஆகிய கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு தரிசு நில தொகுப்பில் இலவசமாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் 2022- 23 ஆண்டிற்கு மஞ்சக்கொல்லை, கவிதைகுடி, கும்முக்கோட்டை, முத்துவயல், கருத்தனேந்தல், பாண்டி கண்மாய் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா ஆய்வு செய்தார். அப்போது அவர் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து சங்கமாக பதிவு செய்ய வேண்டும் என்றும், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் எக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 400 சிறுதானியங்கள் மற்றும் எள் சாகுபடி செய்தால் மானியம் பெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு நாகராஜன், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஸ்ரீதர், போகலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமித்ரா, துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெய்சங்கர், ஆனந்த், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்